நேற்று முன் தினம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் படத்தின் டைட்டிலை ‘கத்தி’ என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையொட்டி சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ‘கத்தி’ என்ற டைட்டில்தான் டிரெண்ட் ஆக ஒரு நாள் முழுவதும் இருந்தது. ஃபேஸ்புக்கில் உள்ள விஜய் ரசிகர்கள் கத்தியின் ஸ்டில்களை அவர்களாகவே வடிவமைத்து இணையத்தில் பதிவு செய்தனர். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
மேலும் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்து அமைப்பு ஒன்று ‘கத்தி’ என்ற தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நகரின் பல இடங்களிலும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. இந்த அமைப்பு ஏற்கனவே “துப்பாக்கி” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறையை தூண்டும் வகையில் ஆயுதங்களின் பெயர்களை திரைப்படத்தின் பெயர்களாக வைப்பது வன்முறை கலாச்சாரத்தை தூண்டும் செயல் என்றும், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் இதில் தலையிட்டு படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment