Wednesday, March 26, 2014

சமந்தாவின் கவர்ச்சிப் படங்களால் சித்தார்த் அதிர்ச்சி..?

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ´அஞ்சான்´ படத்தில் சமந்தா படுகிளாமராக நடிப்பதாக செய்திகள் கசிந்தன.


இதுவரை சமந்தா தமிழில் மிக அதிகளவில் கிளாமராக நடித்தது இல்லை. ஆனால் அஞ்சான் படம் அந்த சாதனையை முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது.அதை மெய்ப்பிப்பது போல் சமீபத்தில் சமந்தாவின் கிளாமரான அஞ்சான் பட புகைப்படங்கள் வெளியாகின.இதை பார்த்த மற்ற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்தில் சமந்தா நீச்சலுடை போன்ற கிளாமரான உடையில் நடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சமந்தா, “அஞ்சான்” படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சி காட்டியுள்ளேன். அதுவும் அந்த ஒரு படத்தில் மட்டும்தான். இனிவரும் படங்களில் கிளாமரை தொடரமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம்.இதற்கு இன்னொரு முக்கிய காரணம், சூர்யாவுடன் படுகிளாமராக நடித்ததை கேள்விப்பட்டு சித்தார்த் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.ஆனால் அஞ்சான் படத்தில் பாடல் காட்சிகள் மட்டுமின்றி சூர்யாவுடன் மிக நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.எப்படியும் படம் வெளியானது எது உண்மை என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment