அஜீத், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வீருதொக்கதே என்ற படம் ஆந்திராவில் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்காக அதிகளவில் தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் இந்த படத்தை குறித்து சில நாட்களுக்கு முன் எழுந்த ஒரு கிசுகிசு தமன்னாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வீருதொக்கதே படத்தின் தெலுங்கு டப்பிங் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு தமன்னாவை தயாரிப்பு தரப்பு அழைத்தபோது, தனக்கு ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே வரமுடியும் என்று டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபம் அடைந்த அந்த தயாரிப்பாளர். உடனடியாக தயாரிப்பு சங்கத்தை கூட்டி, தமன்னாவை இனிமேல் எந்த தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தடை போட்டாராம். அந்த தயாரிப்பாளர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் உடனே அவருக்கு பேச்சுக்கு கட்டுப்படு இனி தங்கள் படங்களில் தமன்னாவை புக் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமன்னா அதிர்ச்சியாகி, பின்னர் தயாரிப்பாளரின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று அவரை மணிக்கணிக்க்கில் தனிமையில் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. தமன்னாவில் சமாதானத்தில் திருப்தி அடைந்த தயாரிப்பாளர் தற்போது தடையை நீக்கிவிட்டார் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment