டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சார்மி, அதன் பின்னர் கண்மணி இயக்கத்தில் ‘ஆஹா எத்தனை அழகு’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரும் புகழ் பெற்றார். அதன்பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் கவர்ச்சி வேடங்களில் கலக்கில் பல வருடங்கள் தெலுங்கு திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக திகழ்ந்தார்.
தற்போது இளம் நடிகைகளின் கவர்ச்சிக்கு முன்னால், சார்மியின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர், தனது காதலர் இசையமைப்பாளர் தேஸ்ரீ பிரசாத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இன்பச்சுற்றுலா சென்று வருகிறார்.
சுற்றுலாவுக்கு சென்ற இடங்களில் நீச்சல் குளங்களில் காதலருடன் சேர்ந்து குளிப்பதாக கூறப்படுகிறது. அதுதவிர ஐதராபாத்தில் உள்ள இரவு நேர பப்களுக்கும் இவர்கள் ஜோடியாக சென்று வருகின்றனர். இவருடைய நீச்சல்குள புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது. இவர்களுக்கு தெரியாமலேயே இவர்களுடைய நீச்சலுடை படங்களை இணையத்தில் பதிவு செய்து வருவது குறித்து காதலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர போலீசாரிடம் புகார் செய்ய இருப்பதாக சார்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த தகவல் ஆந்திர பத்திரிகையில் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் முதல்முதலாக சார்மியின் நீச்சலுடை படங்களை வெளியிட்ட ஒருவர் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டதாக தெரிகிறது. தனிப்பட்ட முறையில் சார்மியிடம் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறபடுகிறது.
No comments:
Post a Comment