Monday, March 24, 2014

விஷாலைப் படத்தில் காதலிக்கலாம் ஆனால் நிஜத்தில் முடியாது !

முதல் மூன்று படங்கள் வெற்றி பெற்றதில் தமிழில் பிஸியான நடிகையாகிவிட்டார் லட்சுமி மேனன். இவர் பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் ‘ஜிகர்தண்டா’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு யோசிக்காமல் பதிலளித்தார் லட்சுமி மேனன். படிப்பு, காதல், முத்தக் காட்சி, கல்யாணம், என எதைப் பற்றிக் கேட்டாலும் பளிச்சென்று பதில் அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், உங்களுக்கும் விஷாலுக்கும் காதல் என்று கோலிவுட்டே கிசுகிசுக்கிறது. ஆனால் அதப்பற்றி நீங்கள் மறுப்பு எதும் சொல்லவில்லையே என்று கேட்டனர். அதற்கு லட்சுமி “திரும்பத் திரும்ப நான் அதைப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றார்.
விஷால் பழக இனிமையானவர். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நான் மீரா என்ற கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். மீரா என்ற பெயருக்குத் தகுந்த மாதிரி விஷாலை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் கேரக்டர். விஷாலைப் படத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் நிஜத்தில் நிச்சயமாக முடியாது.

No comments:

Post a Comment