விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின்
மிகப்பெறிய வெற்றி துப்பாக்கி இப்படத்திற்கு பிறகு
இவர்கள் இருவரும்
மீண்டும் ஒரு
பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளார். இதனால் விஜய்யின்
ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், சமந்தா
நடிக்கும் இப்படத்தின்
படப்பிடிப்பு இரவு பகலாக ஹைதரபாத்தில் நடந்து
வருகிறது.
இப்படத்தினை ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு
செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை
தமிழ் சினிமாவில்
பல பாடல்களைப்
பாடிய விஜய்,
சமீபமாக 'துப்பாக்கி'
படத்தில் கூகுள்
கூகுள், 'தலைவா'
படத்தில் வாங்கண்ணா
வணக்கங்கண்ணா, 'ஜில்லா' படத்தில் கண்டாங்கி கண்டாங்கி
போன்ற பாடல்களை
விஜய் பாடியிருந்தார்.
இப்பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்
பெற்றது. தற்போது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும்
படத்தில் அனிருத்
இசையில் விஜய்
ஒரு பாடல்
பாடவிருக்கிறாராம். ஏற்கனவே இப்படத்திற்காக
ஒரு பாடலை
கம்போஸ் செய்து
முடித்துவிட்டார் அனிருத். அடுத்து விஜய் பாடும்
பாட்டைத் தான்
கம்போஸ் செய்யவிருப்பதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment