Monday, March 24, 2014

இதெல்லாம் ஒரு கதையா..? : ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ டைரக்டரை விரட்டியடித்த சிவகார்த்திகேயன்!

எக்குத்தப்பாக ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அந்த டைரக்டர் அடுத்த படம் எடுப்பது என்பது கொஞ்சம் கத்தி மீது நடப்பது மாதிரி தான். அப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் தான் மாட்டிக்கொண்டிருக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டைரக்டர் பொன்ராம்.

ஊதாக்கலரு ரிப்பன் என்ற ஒரே ஒரு கமர்ஷியல் பாட்டில் தப்பித்துக் கொண்ட அந்தப்படம் அப்படியே அடுத்த பட வாய்ப்பை பொன் ராமுக்கு லிங்குசாமியின் கம்பெனியில் வாங்கிக் கொடுத்தது.

முந்தையை படம் எப்படியோ கதையே இல்லாமல் கல்லா கட்டி விட்டாலும், இந்தப்படத்தின் கதையை கொஞ்சம் ஸ்ட்ராங்காக தயார் செய்யச் சொன்னாராம் சிவகார்த்தியேகன். ஆனால் அவர் மான் கராத்தே படப்பிடிப்பை முடித்து வந்த பிறகும் கூட கதையை தயார் செய்யாமல் காலத்தை கடத்தி வந்தாராம் பொன்ராம்.

இப்போது மான் கராத்தே ரிலீசுக்கு ரெடியாக உள்ள நிலையில் பொன்ராமிடன் கதையைக் கேட்ட சிவகார்த்திகேயன் ஓ… இது நம்ம படத்தோட கதையா..? என்று நக்கலடித்தாராம். அதோடு கதையில டெப்த் பத்தாது. ஏற்கனவே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பெரிய ஹிட் கொடுத்தாச்சு. அதனால் இந்தப்படத்தோட கதை ரொம ஸ்ட்ராங்கா இருக்கணும் . அதனால் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துங்க என்று டைம் கொடுத்திருக்கிறார்.

பொன்ராமும் தனது உதவியாளர்களை பர்மா பஜார், சத்யா பஜார் ஆகிய டிவிடி பஜார்களுக்கு முடுக்கி விட்டிருக்கிறார்.

இதற்கிடையே பொன்ராமை நம்பாத சிவகார்த்திகேயன் அவருக்கு கொடுத்த தேதிகளை அப்படியே தனது அண்ணன் தனுஷ் தயாரிக்கும் படத்துக்கு தூக்கி கொடுத்து விட்டார்.

No comments:

Post a Comment