Saturday, March 29, 2014

ஓசி காரணமாக மினரல் வாட்டரில் குளிக்கும் பாலிவுட் நடிகை.!!

பாலிவுட் ஊடகங்களில் தற்போது ஒரு கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் தினசரி மினரல் வாட்டரில்தான் குளிக்கிறார் என்பதுதான் அந்த வதந்தி.
இதுகுறித்து நடிகையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறிய பதில் "நான் தற்போது மும்பையில் உள்ள கார் என்ற பகுதியில் உள்ள புதிய வீட்டில் குடிபெயர்ந்துள்ளேன். நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு இன்னும் மும்பை கார்ப்பரேஷனின் தண்ணீர்க்குழாய் சப்ளை கிடைக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் இன்னும் வீட்டிற்கான ஓசி எனப்படும் ஆக்யுபேஶந் ஸர்டிஃபிகேட் முறையாக பெறாததால் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வாட்டர் பைப் கனெக்ஷன் கிடைக்கவில்லை.

இதன் காரணமாகத்தான் நான் மினரல் வாட்டரை விலை கொடுத்து வாங்கி குளிப்பது முதல் அனைத்து செயல்களுக்கும் பயன்படுத்துகிறேன். இந்த வாரத்திற்குள் எங்களது வீட்டில் தண்ணீர் பைப் கனெக்ஷன் கிடைத்துவிடும் என வீட்டு உரிமையாளர் உறுதியளித்திருப்பதாலும், அதன்பின்னர் கார்ப்பரேஷன் தண்ணீரைத்தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்றும் விளக்கம் கூறினார்.


No comments:

Post a Comment