Thursday, March 27, 2014

காதலனை கொன்று காதலியை கூட்டாக கற்பழித்த கும்பல்

காதலனை கொன்று காதலியை கூட்டாக கற்பழித்த கும்பல்


இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதியில் வைத்து தனது காதலரை தாக்கி கொலை செய்துவிட்டு, தன்னை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபர்களை குறித்த பெண் அடையாளம் காட்டினார்.

2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தங்காலையில் உள்ள “தே நேசர்” சுற்றுலா விடுதியில் ரஷ்ய காதலர்களான குராம் ஷேய்க் மற்றும் விக்டோரியா ஆலெக்ஸ்ஸாண்டிரோநோவா ஆகியோர் மீது ஆளும் கட்சி ஆதரவாளர் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் போது குராம் ஷேய்க் பாடுகாயமடைந்து இறந்து போனதாகவும், அதன் பின்னர் காதலி விக்டோரியா ஆலெக்ஸ்ஸாண்டிரோநோவா மீது தாக்குதல் நடத்தி அவர் மயக்கமடைந்த பின்னர் அவர் மீது குழுவினர் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டது.



அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு இடம்பெற்ற விசாரணைகளின் போது சந்தேக நபரை அடையாளம் காட்ட விக்டோரியா தவறியிருந்தார். ஆயினும் அந்த நேரத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்த காரணத்தினால் அடையாளம் காட்டவில்லை எனவும், தற்சமயம் தனது பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளமையினால் அடையாளம் காட்ட முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்த விக்டோரியா அரச சட்டத்தரணியின் கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு, சந்தேக நபர் ஒருவரையும் அடையாளம் காட்டினார்.

சம்பம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் தாக்கப்பட்ட பொழுது தான் மயக்கமடைந்ததாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயமே தனக்கு நினைவு திரும்பியதாகவும் தெரிவித்தார். மேலும் வைத்தியசாலையில் தனது நிலமை அலங்கோலமாக இருந்ததாகவும், தனது ஆடையின் மேல்பகுதி கிழிக்கப்பட்டு இருந்ததாகவும், உள்ளாடைகள் அகற்றப்பட்டு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment