சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்க தொடங்கினர். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.
பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பின் போது இருவரும் நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ம் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது. ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படம் வெளிவந்து பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அது ‘ராஜா ராணி’ படத்துக்காக செய்யப்பட்ட விளம்பரம் என தெரிய வந்தது.
அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்றும் கூறுகின்றனர். பார்ப்போம் திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment