என்றென்றும் புன்னகை வெற்றிப்படத்தை அடுத்து ஜீவா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘யான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கடல்” படத்தில் நடித்த துளசி நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜீவா தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். தெலுங்கில் பிரபலமாக உள்ள இயக்குனர் கருணாகரனின் இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜீவாவின் தந்தை தனது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜீவாவுக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க த்ரிஷா பெரும் முயற்சி செய்தார். ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் கருணாகரன் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படமான டார்லிங் படத்தில் ஹீரோயினியாக நடித்த காஜல் அகர்வால், இயக்குனரிடம் நேரடியாக சென்று தனக்கு ஜீவாவுடன் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். கருணாகரனுக்கும், காஜல் அகர்வாலுக்கும் ஏற்கனவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக கடந்த சில வருடங்களுக்கு முன் டோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது என்பது எல்லோரும் அறிந்த தகவல்.
இந்த படத்தில் த்ரிஷாவுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதாக ஜீவா வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் இயக்குனர் கருணாகரன் பிடிவாதமாக இந்த படத்தில் காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்று உறுதியாக கூறிவிட்டதால், வேறு வழியின்றி ஜீவா விட்டுக்கொடுத்துவிட்டார். தனது தந்தையின் சொந்த பேனரில்கூட தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற அதிர்ச்சியில் இருக்கின்றாராம் ஜீவா
No comments:
Post a Comment