Monday, March 24, 2014

கோவை ஓட்டல் அறையில் ஆர்யா-அமலாபாலின் கூத்துக்கள். ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு.


லிங்குசாமியின் வேட்டை படத்தில் இணைந்த நடித்த ஆர்யா-அமலாபால் ஜோடி மீண்டும் தற்போது பார்த்திபனின் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களின் காட்சிகள் இன்று பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது. ஆர்யாவும், அமலாபாலும் மூன்று நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர்.


வேட்டை படத்தின் நடிக்கும்போதே நல்ல கெமிஸ்ட்ரி இவர்கள் இருவருக்கும் ஒர்க் அவுட் ஆகியிருந்ததாக செய்திகள் அப்போது வெளிவந்தன. இந்த ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளதால் ஊடகங்களின் பார்வை இவர்கள் மத்தியிலேயே இருந்தது. கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் இருவருக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆர்யா, அமலாபாலின் அறையிலேயே பெரும்பாலும் தங்கியிருந்து அரட்டை அடிப்பதாக அந்த ஓட்டல் ஊழியர்களிடம் இருந்து செய்திகள் கசிந்து வருகின்றன.

ஆர்யா, அமலாபால் தங்கியிருந்த ஓட்டலில் தனியார் செக்யூரிட்டி பலமாக இருந்ததால் செய்தி சேகரிப்பவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. ஆனாலும் இருவரும் ஓட்டலின் உள்ளே செய்யும் கூத்துக்களை நேரில் பார்த்த அவர்களுடைய பக்கத்து அறைகளை சேர்ந்தவர்கள் ஃபேஸ்புக்கில் லைவ் நிகழ்ச்சியாக தற்போது அளித்து கொண்டு வருகின்றனர். இந்த கிளுகிளுப்பான செய்திகளை படிக்க ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு பெருமளவு பயனாளிகள் வந்துபோவதாக கூறப்படுகிறது.

Source: From Social Media Websites...

No comments:

Post a Comment