ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை செய்து வருகின்றனர். மில்லில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மில்லுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கோபி பச்சை மலை அடிவாரத்துக்கு சென்றனர். அங்கு பாலுசாமி மதுஅருந்தியதாக கூறப்படுகிறது. காதலன் மது அருந்தியதை கண்ட காதலிக்கும் காதலிக்கும் மது மீது மோகம் ஏற்பட்டது. அவரும் காதலுடன் சேர்ந்து மது அருந்தினார். இதற்கு முன் குடித்திராத அந்த இளம்பெண்ணுக்கு மதுபோதை மயக்கத்தை கொடுததது.
காதல் காதலி இருவரும் மது போதையில் தள்ளாடியபடி கோபி பஸ்நிலையம் வந்தனர். போதை அதிம்கமானதால் வழியில் அவர்கள் தடுமாறி தடுமாறி வந்தனர். ஒருவரை ஒருவர் தங்கி பிடித்தனர் ஆனால் போதையில் இருவரும் கீழே விழுந்தனர். இதை சுற்ரி உள்லவர்கள் பார்த்தி அதிர்ச்சி அடைந்தனர்.
கோபி பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலைய போலீசார் காதல்ஜோடியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது திடீரென காதலன் காதலியை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான்.
போதையில் இருந்த அவன் இளம்பெண்ணை எங்கேயாவது தள்ளிவிட்டு விபரீதம் ஆகிவிடும் என கருதிய போலீசார் அவனை விடவில்லை. பின்னர் இளம்பெண்ணை மீட்டனர். போலீசார் முன்னிலையில் பொதுமக்கள் அந்த பெண்ணின் தலையில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் போதை குறைந்ததும் பெற்றோரை வரவழைத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Sources from Social Media...
No comments:
Post a Comment