கர்ப்பிணி பெண் ஒருவர் காணாமல் போன தனது கணவனை தேடும் கதையம்சம் கொண்ட கஹானி படத்தை இயக்குனர் சுஜோய் பாலிவுட்டில் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இதே கதையை நயன்தாராவின் நடிப்பில் அனாமிகா என்ற தெலுங்கு படத்தையும், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் சேகர் கம்முல்லா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படங்கள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சுஜோய் காஶ் தனது அடுத்த படத்தில் நடிக்க மீண்டும் வித்யாபாலனை ஒப்பந்தம் செய்தார். இந்த படத்தின் பெயர் க்வீந் என்பதாகும். வீரதீர செயல்புரியும் ராணி ஒருவரின் உண்மைக்கதை. இதில் நடிக்க வித்யாபாலன் வாள்சண்டை, குதிரை சவாரி ஆகியவற்றை கற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் திடீரென வித்யாபாலனை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார் இயக்குனர் சுஜோய். காரணம் வித்யாபாலன் தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அட்வ் நிறுவனத்தின் அதிபரை திருமணம் செய்த வித்யாபாலன், குழந்தை பிறப்பை தள்ளி வைத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக திடீரென கர்ப்பமானதால், அந்த கர்ப்பத்தை சினிமா வாய்ப்புக்காக கலைக்க விரும்பாத அவர், இயக்குனரிடம் தன் நிலையை எடுத்து கூறி படத்தில் இருந்து விலகினார். எனவே வித்யாபாலனுக்கு பதிலாக இயக்குனர் சுஜோய் காஶ் தற்போது கங்கனா ரனாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தின் பெயரையும் துர்கா ராணி சிங் என்று மாற்றிவிட்டார்.
No comments:
Post a Comment