Wednesday, March 26, 2014

த்ரிஷா தனது கணவரை கனடாவில் திருமண நிகழ்ச்சியின் போது அறிவிக்கபோவதாக தகவல்

நடிகை த்ரிஷா கனடாவில் வரும் மார்ச் 29-ம் தேதி நடக்கவுள்ள வீவா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து கிளம்புகிறார். இந்த நிகழ்ச்சியில் த்ரிஷாவுடன் மிகவும் நெருக்கமான ஒருவரும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த திருமண நிகழ்ச்சியின் முடிவில் கனடாவில் வைத்து நடிகை த்ரிஷா தன்னுடைய திருமணம் குறித்தும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இப்பொழுது வந்துள்ள இந்த செய்தியால் நிகழ்ச்சி மேலும் களைகட்டும் போல தெரிகின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பெரு நகரங்களில் இருந்து தேடி பிடித்து சிறந்த மாடல்களை நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் கனடா அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment