இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டிற்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, டிப்–டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.
லிப்டுக்குள் நுழைந்ததும் நடிகையை அந்த வாலிபர் கட்டியைனைத்து மானபங்க படுத்த முயன்றுள்ளார் ஆனால் நடிகை அதற்குள் சுதாரித்து கொண்டு வாலிபருக்கு கீழ்பக்கமாக உதைகொடுத்து தப்பித்துள்ளார். பாதுகாவலர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. என்னை மானபங்கம் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment